சுடச்சுட

    

    சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு

    By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக்கு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடம் இருந்து, பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள்பட்ட வருவாய் மாவட்டத்திற்கு 2 உறுப்பினர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் ஆர்.முருகேசன், எஸ்.சுப்பராஜு, கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ் சி.ரத்தினசிகாமணி, டி.மனோகர ஜஸ்டஸ், தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் போட்டியின்றி கே.தணிகாசலம், பி.சிவகாமி ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai