சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது

    By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் பேட்டரியை திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

    திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் புறவழிச்சாலையோரமாக தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு சொந்தமான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்லிடப்பேசி கோபுர அறையில் இருந்த 6 பேட்டரிகளை, தூத்துக்குடி பாரத ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா (36) திருடியது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின்பேரில் கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai