சுடச்சுட

    

    நெல்லை அருகே தாமிரவருணியில் அம்மன் சிலை கண்டெடுப்பு

    By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் ஆறரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

    ஆடி அமாவாசையையொட்டி திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் புனித நீராடினர்.

    அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒருவரின் காலில் நீளமான பாறை கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் உதவியுடன் பாறையை வெளியே எடுத்து வந்தனர்.

    அப்பாறை கருங்கல்லில் செதுக்கப்பட்ட அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அம்மன் சிலையை பார்த்துச் சென்றனர்.

    தகவலறிந்த சீவலப்பேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அச்சிலை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த அம்மன் சிலை குறித்து ஆய்வு செய்த பின்னர், சிலை குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai