சுடச்சுட

  

  மணிமுத்தாறு மலையில் வைரக்கல் எடுக்க முயற்சி: 7 பேர் கைது

  By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணிமுத்தாறு மலையில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்றதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  மணிமுத்தாறு மலையில் சிங்கம்பட்டி பீட் எலுமிச்சையாறு சரகத்தில் மர்ம நபர்கள் வைரக்கல் தோண்டி எடுக்க முயற்சிப்பதாக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச் சரகர்கள் வெள்ளைத்துரை (அம்பை), இளங்கோ (கடையம்) ஆகியோர் தலைமையில் வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை எலுமிச்சையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் குழி தோண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து வனத் துறையினர் விரட்டிச் சென்று 7 பேரை பிடித்தனர்.

  சிங்கம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52), மேலப்பாளையம் அபுல்காசீம் (38), நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம் காசி மகன் செல்வகுமார் (30), அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுப்பிரமணியன் (34), உடையார்பாளையம் குப்புசாமி மகன் கோவிந்தன் (37), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (55), பெருமாள் மகன் ரவி (25) ஆகியோர், சிங்கம்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்துவுடன் சேர்ந்து வைரக்கல் எடுக்க முயன்றது தெரியவந்தது. இதில் 7 பேரை வனத் துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச் சென்ற சுடலைமுத்துவை தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட 7 பேரையும் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வனத் துறை பணியாளர்கள் இருவரின் உதவியுடன் இந்த கும்பல் புலிகள் காப்பக வனப்பகுதியில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai