சுடச்சுட

  

  மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயிலில் வளைகாப்பு நிகழ்ச்சி

  By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி அருகே மேலநத்தத்தில் உள்ள அருந்தபசு அம்மன் கோயிலில் ஆடி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  இக்கோயிலில் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வளைகாப்பு மற்றும் கூழ் வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்குப் பின்பு பக்தர்களுக்கு கூழ் விநியோகிக்கப்பட்டது. உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் பெறவும், மழைவளம் பெருகவும் வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

  இதில், மேலநத்தம், கருப்பந்துறை, விளாகம், திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி நகரம், பாட்டப்பத்து, குறுக்குத்துறை பகுதிகளைச் சேர்ந்தோர் திரளாக கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai