சுடச்சுட

  

  ரயில் மறியல் முயற்சி: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

  By திருநெல்வேலி  |   Published on : 03rd August 2016 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறி, அதைக் கண்டித்து, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியலில் ஈடுபட வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 147 பேர் கைது செய்யப்பட்டனர்.

  காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

  அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலிருந்து கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி வந்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

  இதில் பங்கேற்ற கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ். சாகுல்ஹமீது, துணைத் தலைவர் எஸ்.எஸ். அப்துல்கரீம், மாவட்டப் பொதுச்செயலர் என். இலியாஸ், மாவட்டச் செயலர்  ஹயாத் முஹம்மது, மாவட்டப் பொருளாளர் மஜித், மேற்கு மாவட்டத் தலைவர்  திவான்ஒலி, பொதுச்செயலர் ஹக்கீம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அஷ்ரப்அலி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் சுல்பிகர்அலி உள்ளிட்ட 147 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai