Enable Javscript for better performance
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 04th August 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் இயங்கி வந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், கடந்த 1.8.2012 இல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் இணைக்கும் பணிகள் முழுமை பெற்றதும் பல்கலைக்கழகங்களில் பணி செய்து வரும் உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இணைக்கும் பணிகள் முழுமை பெற்றதை அடுத்து 2015 இல் அரசு அரசாணை வெளியிட்டது. எனினும் பல்கலைக்கழக நிர்வாகம் அரசாணையின்படி உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை. கடந்த 2012 முதல் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் பணி செய்து வரும் 35 உதவிப் பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாதம் 12 ஆம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வோம். ஆக. 12 இல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai