சுடச்சுட

  

  நெல்லையில் ஆக. 19 முதல் 21 வரை உலக புகைப்படக் கண்காட்சி

  By திருநெல்வேலி  |   Published on : 04th August 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் இம் மாதம் 19 முதல் 21 ஆம் தேதி வரை உலக புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற உள்ளன.

  இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் மு.நவராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், நெல்லை வீக்கென்ட் கிளிக்கர்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இம் மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை உலக புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், புகைப்பட போட்டியும் நடைபெற உள்ளது.

  சமூக விழிப்புணர்வு, மகிழ்ச்சியான தருணங்கள், குழந்தைகளின் பாவனைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் பொதுமக்கள், மாணவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் எடுத்த புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதே தலைப்புகளில் புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் கேமராக்களில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். போட்டிக்கான புகைப்படங்களை இம் மாதம் 18 ஆம் தேதிக்குள் மாவட்ட அறிவியல் மையத்துக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்தவற்றுக்கு அன்றைய தினமே பரிசுகள் வழங்கப்படும்.

  இதுகுறித்த விவரங்களை அறிய 9442994797 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai