Enable Javscript for better performance
நெல்லை அருகே தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை அருகே தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை

    By அம்பாசமுத்திரம்  |   Published on : 04th August 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் பொதுக்குடியில்  குடும்பத் தகராறில் தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த புதியவன் மகன் விவசாயி முருகன் (45). இவரது மனைவி சுப்புலட்சுமி. இத் தம்பதியின் மகள் இசக்கியம்மாள் (18). இவர் பழைய பேட்டையில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முருகன் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்தாராம். அவரை வயலுக்குச் சென்றுவருமாறு மனைவி சுப்புலட்சுமி வற்புறுத்தினாராம். இதையடுத்து முருகன் மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்றாராம்.  அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பாப்பாக்குடி போலீஸார் அவரை மறித்து மது அருந்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக அபராதம் விதித்தனராம்.

    பின்னர் வீட்டுக்கு வந்த முருகன், மனைவி சுப்புலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டாராம். இதைக் கவனித்த முருகன் மகள் இசக்கியம்மாள் வீட்டிலிருந்த உர மருந்தை எடுத்து குடித்துவிட்டாராம். உடனடியாக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இசக்கியம்மாள் உயிரிழந்தார். இசக்கியம்மாள் உயிரிழந்த தகவலறிந்து மனமுடைந்த முருகன் தானும் உரமருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாராம்.

     தகவலறிந்த பாப்பாக்குடி போலீஸார் முருகன் உடலைக் கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   இது குறித்து பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் பலவேசம் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai