Enable Javscript for better performance
மாநில நீச்சல்: நெல்லை வீரர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த வீரர் சிறப்பிடம் பெற்றார்.

    தமிழக முதல்வர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் மாவட்டம், மண்டலம் அளவில் நடத்தப்பட்டு இறுதியாக மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மாநில டென்னிஸ் போட்டியும், ஈரோட்டில் மாநில கைப்பந்துப் போட்டியும் நடைபெற்றன. இதில், மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல்குள வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

     இப் போட்டியில் தனிநபர் 200 மீட்டர் மெட்லி பிரிவில் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள அருள்மிகு பன்னிருபிடி அய்யனார் கல்லூரி மாணவர் தி.சேதுமாணிக்கவேல்  முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவரை திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழகத் தலைவர் திருமாறன், செயலர் லட்சுமணன் உள்ளிட்டோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai