சுடச்சுட

  

  100 சதவீதம் தேர்ச்சிபெற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: கல்வி அதிகாரி அறிவுரை

  By திருநெல்வேலி  |   Published on : 04th August 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை கூறினார்.

  திருநெல்வேலி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை திருநெல்வேலியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  முதல் அமர்வில், திருநெல்வேலி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், 2ஆவது அமர்வில் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கலந்துகொண்டனர்.

  பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன், தலைமையாசிரியர்களிடம் மாணவர்கள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார்.

  அப்போது அவர் பேசியது: அரையாண்டு தேர்வுக்கு பிறகு பலஹீனமாக இருக்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிப்பதை விட இப்போது இருந்து காலை, மாலையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியும். 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டு முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.

  இப்பயிற்சியில், திருநெல்வேலி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபாண்டி (திருநெல்வேலி), இடைநிலைக் கல்வி இயக்க மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த. தனசிங்ஐசக்மோசஸ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச. ஆவுடையப்பகுருக்கள், கண்காணிப்பாளர் முஹம்மதுபுகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai