Enable Javscript for better performance
கவிதைப் போட்டி: படைப்புகளை அனுப்ப ஆக. 15 கடைசி- Dinamani

சுடச்சுட

    

    கவிதைப் போட்டி: படைப்புகளை அனுப்ப ஆக. 15 கடைசி

    By திருநெல்வேலி  |   Published on : 05th August 2016 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை சார்பில் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.

    கவிதைப் போட்டியில் பங்கேற்போர் "அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு' என்ற தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை மட்டும் எழுத வேண்டும். எந்த பாவினத்திலாயினும் கவிதை ஒன்று மட்டும் அனுப்பலாம். படைப்பாளரின் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழி கடிதம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

     கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எதுவும் இருக்கக்கூடாது. கவிதையை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு அல்லது கணினி அச்சு செய்து மூன்று படிகள் அனுப்ப வேண்டும். சிறந்த மூன்று படைப்புகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். கவிஞர் குமார.சுப்பிரமணியம், செயலர், நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை, 854, இரண்டாம்தெரு, தி.வி.சுந்தரம் நகரம், திருநெல்வேலி-11 என்ற முகவரிக்கு  படைப்புகளை இம் மாதம் 15 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அந்த இலக்கிய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai