சுடச்சுட

  

  திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் சாலைகளைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தாழையூத்தில் இருந்து தென்கலம் வழியாக ரஸ்தா பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. மொத்தம் 10 கி.மீ. தொலைவுள்ள இந்த சாலையில் 5 கி.மீ. தொலைவுக்கு சாலை ஏற்கெனவே சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

  தாழையூத்து, தென்கலம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். ஆகவே, சாலை சீரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கக்கோரி தாழையூத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாழையூத்து-ரஸ்தா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  தகவலறிந்ததும் தாழையூத்து காவல் ஆய்வாளர் ஜீன்குமார், மானூர் வட்டாட்சியர் ஜஸ்டின், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சுப்புராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர்.

  இதில், இம்மாதம் 30ஆம் தேதிக்குள் சாலைச் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai