Enable Javscript for better performance
திருவேங்கடம் வட்டத்தில் 4 கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவேங்கடம் வட்டத்தில் 4 கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By திருநெல்வேலி  |   Published on : 05th August 2016 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் காலியாகவுள்ள 4 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இந்த காலிப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். பகிரங்க போட்டியாளருக்கு 30 வயதும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருவேங்கடம் வட்டத்தில் தெற்கு குருவிகுளம், நாலுவாசன் கோட்டை, வடக்கு குருவிகுளம், பழங்கோட்டை ஆகிய 4 கிராமங்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தகுதியான நபர்கள் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

    விருப்பமுள்ளோர் தங்களது சுய விவரங்களை வெள்ளைத் தாளில் எழுதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை, இனசுழற்சி அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருவாய் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருவேங்கடம் என்ற முகவரிக்கு வரும் 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பவேண்டும். இதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    தேர்வு முறைகள் அனைத்தும் ஒளிவுமறைவற்ற வகையில் மேற்கொள்ளப்படும். இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். வருவாய்த்துறை சட்டப்படி நியமனக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்படும்.

    நியமனத்தில் தவறு இருந்தால் ரத்து செய்யவும் வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளது.

    நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் அளிக்கும் சான்றுகள் ஒப்பம் பெற்று வழங்க வேண்டும்.

    சான்றுகள் போலி என தெரிந்தால் தொடர்புடையோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai