சுடச்சுட

    

    செப்.2 வேலைநிறுத்தம்: அனைத்து சங்க ஆயத்த மாநாடு

    By திருநெல்வேலி  |   Published on : 06th August 2016 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு முன்னோடியாக திருநெல்வேலியில் அனைத்து சங்கங்களின் ஆயத்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு, தொமுச பொதுச் செயலர் தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ ஆர். மோகன், ஏஐடியூசி சடையப்பன், ஹெச்எம்எஸ் மகாராஜா, ஐஎன்டியூசி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எஸ். காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் வேலைநிறுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்;  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது; தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்; அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்; தொழிற்சங்க பதிவுக்கு விண்ணப்பித்த 45 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்; ரயில்வே, வங்கி, பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிட வேண்டும்; இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது எனவும், முன்னதாக ஆக.9ஆம் தேதி பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆயத்த மாநாட்டில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai