Enable Javscript for better performance
ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளை காய்கனி மூட்டையில் கடத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளை காய்கனி மூட்டையில் கடத்தியவர் கைது

    By தென்காசி,  |   Published on : 07th August 2016 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு காய்கனி மூட்டைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (42). இவர் தினந்தோறும் சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு காய்கனி கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சனிக்கிழமை அவர் கொண்டு சென்ற காய்கனி மூட்டைகளை, கேரள மாநிலம், ஆரியங்காவு பகுதியில் கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.

    இதில் காய்கனி மூட்டைகளுக்கு உள்ளே மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து மாடசாமியை கைது செய்த கேரள போலீஸார், புகையிலைப் பொருள்களையும், சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai