சுடச்சுட

  

  ஆரியங்காவு பகுதியில் ஆடுகளை அடித்துக் கொன்ற புலி: மக்கள் அச்சம்

  By தென்காசி  |   Published on : 08th August 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளையும், மாட்டையும் புலி கடித்து குதறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதி ஆரியங்காவு. இந்த வனப்பகுதியில் பல்வேறு அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்களை சிறுத்தைகள், கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்துவது வாடிக்கை.

  இந்நிலையில், கடந்த சிலமாதங்களாக குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை புலி வந்துசெல்வது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரியங்காவு கறவன் பாறை பகுதியைச் சேர்ந்த ஜோனி என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 3 பெரிய ஆடுகளும், 1 குட்டி ஆட்டையும் வளர்த்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இவரது தோட்டத்துக்குள் புலி ஒன்று புகுந்துள்ளது.

  இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்த நாய் குரைத்துள்ளது. இதையடுத்து, ஜன்னல் வழியாக ஜோனி வெளியே பார்த்துள்ளார். அப்போது, புலியொன்று தொழுவத்தில் கட்டியிருந்த 3 ஆடுகளை கொன்று குதறிவிட்டு, ஒரு குட்டியை மட்டும் வாயில் கவ்விக் கொண்டிருந்ததாம். உடனே, அவர் சப்தம் போடவே புலி அங்கிருந்து தப்பியோடி விட்டதாம்.

  இதேபோல், கழுதுருட்டி பகுதியில் சோமன் என்பவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டையும் புலி அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai