சுடச்சுட

    

    செங்கோட்டை அருகே கடைக்குள் லாரி புகுந்தது: இருவர் பலி: மற்றொரு விபத்தில் 20 பேர் காயம்

    By தென்காசி  |   Published on : 08th August 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே ஜெராக்ஸ் கடைக்குள் ஞாயிற்றுக்கிழமை லாரி புகுந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இலத்தூரிலிருந்து கேரளத்துக்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தமிழக- கேரள எல்லை, செங்கோட்டையை அடுத்த தென்மலையில் கேரள வணிகத்துறை அலுவலகம் அருகில் சென்றபோது, பிரேக் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடையின் உரிமையாளர் அனில்குமார், கடைக்கு நகல் எடுக்க வந்திருந்த ஆரியங்காவு கரையாளர் தோட்டத்தைச் சேர்ந்த கோபி மகன் சதீஷ் ஆகிய இருவரும் லாரிக்குள் சிக்கி அதே இடத்தில் இறந்தனர்.

    தகவலறிந்த தென்மலை போலீஸார், அவர்களது உடலைக் கைப்பற்றி, லாரி ஓட்டுநர் ஆய்க்குடியை சேர்ந்த சிவலிங்கம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு விபத்து:  காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலாப் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குற்றாலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். கடையநல்லூர் அருகே துரைச்சாமியாபுரம், காமராஜ்புரம் பகுதியை அதிகாலையில் நெருங்கியபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது.

    இதில், வீட்டுச் சுவரில் கீறல் விழுந்தது. எனினும், வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி தப்பினர்.

    அதேவேளையில், பேருந்து ஓட்டுநர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், மாணவர்கள் முருகன், பிரகாஷ், ஜெகதீஷ், சுரேஷ், ரவி உள்பட 20 பேர் காயமடைந்தனர். அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai