Enable Javscript for better performance
நெல்லை-வி.கே. புரத்துக்கு இரவில் பேருந்து சேவை குறைப்பு: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை-வி.கே. புரத்துக்கு இரவில் பேருந்து சேவை குறைப்பு: பொதுமக்கள் அவதி

    By திருநெல்வேலி  |   Published on : 08th August 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரத்திற்கு இரவில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பொதுமக்கள்  பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    திருநெல்வேலியில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், பாபநாசம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் உள்பட இம்மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    பாபநாசத்திலிருந்து திருநெல்வேலிக்கு சாதாரண, விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், திருநெல்வேலியிலிருந்து பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரத்துக்கும் பத்தமடை, பேட்டை போன்ற வழித் தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    காலை, மாலை நேரங்களில் இந்த வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தொலைதூரம் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்தமடை வழியாக இரவு 11.45, நள்ளிரவு 1.30 மணிக்கும், பேட்டை வழியாக இரவு 12.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மதுரையிலிருந்து பாபநாசம் செல்லும் பேருந்து இரவு 11 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த சேவையினால் தனியார் நிறுவனங்களில் பணி செய்வோர் தங்கள் பகுதிக்கு செல்ல வசதியாக இருந்தது.

    கடந்த சில தினங்களாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவில் 12.30 மணிக்கு பேட்டை வழியாகவும், நள்ளிரவில் 1.30 மணிக்கு பத்தமடை வழித் தடத்திலும் பாபநாசத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இரவு 11.45 மணிக்கு பிறகு அதிகாலை 3.30 மணிக்குதான் பாபநாசத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அதிகாலை இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால் இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி இரவு 12.30 மணி, 1.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai