சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதிய விபத்தில் இறந்தார்.

    பாளையங்கோட்டை அருகேயுள்ள திருவண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மனைவி செண்பகம் (45). இவர், பொட்டல் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாராம்.  அப்போது, அவ்வழியாக மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற கார் செண்பகம் மீது மோதி விபத்து நேரிட்டதாம். இதில், பலத்த காயமடைந்த செண்பகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai