சுடச்சுட

  

  ரயில்வே பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி நிறைவு

  By திருநெல்வேலி  |   Published on : 08th August 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் நடைபெற்று வந்த ரயில்வே பணியாளர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

  தெற்கு ரயில்வேயின் பொன்மலை கோட்டம் சார்பில், ரயில்வே பணியாளர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.

  40-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு, தலைமை வகித்த தெற்கு ரயில்வே மூத்த மருத்துவ இயக்குநர் பிரசன்னகுமார் பேசுகையில், விபத்துகள் என்பவை எதிர்பாராமல் நிகழ்பவை. ஆகவே, ரயில்வே பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். ரயில்வே துறையின் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்வதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணித்து தடுக்க வேண்டும். பயணிகளுக்கு மருத்துவ தேவைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களின் மருத்துவக் குழுவினர் மிகவும் கவனத்தோடு செயல்பட்டு பயணிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

  விழாவில், உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் எம்.பாஸ்கர் வரவேற்றார். மூத்த மருத்துவக் கண்காணிப்பாளர் ஆர்.செளந்திரராஜன் வாழ்த்திப் பேசினார். பாதுகாப்பு அதிகாரி ஜி.சந்திரசேகர், மருத்துவர் ஜி.சாகு, திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  முதலுதவிப் பயிற்சியில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்களுக்கு சான்றிதழ்களும், பயிற்சியின்போது சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai