சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு: ஆட்சியர் ஆலோசனை

  By திருநெல்வேலி  |   Published on : 09th August 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலியில் அதிகாரிகளுடன் ஆட்சியர் மு. கருணாகரன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில், ஆட்சியர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக தங்களது வாக்கை பதிவு செய்யும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகரம் மற்றும் கிராமங்களில் வாக்குச்சீட்டுகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும்,  வாக்குப்பதிவுக்கு தொடர்புடைய அனைத்துப் பொருள்களையும் அந்தந்த பகுதிக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றிலும், வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல், மாநகர காவல் துணை ஆணையர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, சீனிவாசன், கோட்டாட்சியர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai