Enable Javscript for better performance
சாலைகளை செப்பனிடக் கோரி \\\"விபத்துக் காயங்களுடன்\\\' வந்த நபர்! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலைகளை செப்பனிடக் கோரி "விபத்துக் காயங்களுடன்' வந்த நபர்! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

    By திருநெல்வேலி  |   Published on : 09th August 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைகளை செப்பனிடக் கோரி, விபத்தில் காயமடைந்தவரைப் போன்று வேடமிட்டு நூதன முறையில் கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

    பாளையங்கோட்டையில் ஊசிகோபுரம், முருகன்குறிச்சி பகுதிகளில் சாலைகளில் இருபுறமும் மணல் மேடுகளாகக் குவிந்துள்ள புழுதி மணலை அகற்றாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு வாடிக்கையாகிவிட்டது. இந்த மணலை அப்புறப்படுத்தி மீண்டும் மண் சேகரமாகாத வகையில் தடுக்க பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். இதேபோல, வண்ணாரப்பேட்டை முதல் புதிய பேருந்து நிலையம் வரையிலான சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எச்சரிக்கைப் பதாகை இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரையில் உள்ள சாலையில் அதிகளவில் திருப்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளிலும் எச்சரிக்கைப் பதாகை இல்லை.  இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துக் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தரப்பிலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தீர்வு காணப்படவில்லை.

    இதற்கு, நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம்,  அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை மற்றும் நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்களில் ஒருவர் விபத்தில் காயமடைந்தவர்போல், உடல் முழுவதும் கட்டுப்போட்டபடி நூதன முறையில் வந்திருந்தார். எனினும், அமைப்பின் நிர்வாகிகள் அப்பதுல் கக்கூர் ரகுமானி, க. மகேஷ், பால் அண்ணாதுரை என சிலரை மட்டும் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai