Enable Javscript for better performance
செல்லிடப்பேசி விற்பனை கடையில் தீ- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி சந்திப்பில் உள்ள செல்லிடப்பேசி விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

    திருநெல்வேலி வண்ணார்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (36). திருநெல்வேலி சந்திப்பில் செல்லிடப்பேசி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    திங்கள்கிழமை அதிகாலையில் இக் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதாம். சற்று நேரத்தில் கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.

    தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள், செல்லிடப்பேசி உபகரணங்கள் போன்றவை எரிந்து சேதமாகின.

    இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai