சுடச்சுட

  

  மனிதக் கழிவுகளை மனிதனே அள்ள தடை: மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை

  By திருநெல்வேலி  |   Published on : 09th August 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநகராட்சிப் பகுதியில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணியில் மனிதனை ஈடுபடுத்தினால் ரூ. 2 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

  மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் தொழிலை தடை செய்வது மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான "மறுவாழ்வு சட்டம்-2013' குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் இ. புவனேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகர தலைமை பொறியாளர் நாராயண்நாயர், மாநகர சுகாதார அலுவலர் பொற்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தலைமை பொறியாளர் பேசியது: துப்புரவு பணியாளர்களுக்கு மறுவாழ்வு சட்டம்-2013ஐ அமல்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டத்தை மீறுபவர்களுக்கு  முதல் முறையாயின் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 2 லட்சம் அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து வழங்கப்படும்.  2ஆவது முறையாக இக்குற்றம் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 50 ஆயிரம் அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து வழங்கப்படும் என்றார் அவர்.உணவகம், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள், கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுவோர்,  மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai