சுடச்சுட

    

    ரயில்வே கேட் மீது வேன் மோதல்: ரயில் தாமதம்

    By திருநெல்வேலி  |   Published on : 09th August 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் தனியார் பால் வேன் மோதியதில் ரயில்வே கேட் திங்கள்கிழமை பழுதடைந்தது. இதனால் செங்கோட்டை பயணிகள் ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.

    திருநெல்வேலி சந்திப்பிலிருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை புறப்பட்ட தயாரானது. இதையொட்டி, நகரம் குறுக்குத்துறை பிரதானச் சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில், கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டார்.

    அப்போது, அவ்வழியாக வந்த பால் வேன் தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்று, ரயில்வே கேட் மீது மோதியதாம். இதில் ரயில்வே கேட் பழுதடைந்து, மூட முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த

    ரயில்வே போலீஸாரும், ஊழியர்களும் சென்று கேட்டை சீரமைக்க முயற்சி எடுத்தும் பயனளிக்கவில்லை.

    இதையடுத்து, ஊழியர்கள் இரும்பு சங்கிலியை இருபுறமும் இழுத்துக்கட்டி வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர். இதைத் தொடர்ந்து பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

    இச்சம்பவத்தால் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். கேட் சீரமைக்கப்படும் வரை அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai