Enable Javscript for better performance
நெல்லை மாவட்டத்தில் 8.48 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்: இன்று தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் 8.48 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்: இன்று தொடங்குகிறது

    By திருநெல்வேலி  |   Published on : 10th August 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது. இதில், விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று 15ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

    உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் 2.41 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். இதனை தடுக்க அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் வரும் 10ஆம் தேதி குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு வயதுக் குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள 8 லட்சத்து 48 ஆயிரத்து 794 பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கும், வளர் இளம் மகளிருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள், களப் பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

    1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 எம்எல் திரவம் வழங்க வேண்டும். 2 வயதுக்கு மேல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை அல்லது 10 எம்எல் திரவம் வழங்க வேண்டும். 6 வயது முதல் 19 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai