சுடச்சுட

  

  திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி 20 சதவீத ஊதியம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும்; பாரபட்சமின்றி புதிய பணி ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 240 நாள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி, வண்ணார்பேட்டையில் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அமைப்பின் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கச் செயலர் ஆர். மோகன் தொடங்கிவைத்தார். மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன், பொதுச்செயலர் எஸ். ஜோதி, துணைத் தலைவர் எம். தங்கத்துரை, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள், நிர்வாகிகள் டி. காமராஜ், என். சிவக்குமார், ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai