சுடச்சுட

  

  வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

  வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்; தாற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 180 வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 2 தினங்கள் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைமையிடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென என முடிவு செய்யப்பட்டிருந்தது.

  அதன்படி, பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் கே. ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். போராட்டத்தை மூத்த வழக்குரைஞர் ராஜாசிங் தொடங்கிவைத்தார்.

  சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், பொருளாளர் சிவசங்கரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் அருணாசலம் (செங்கோட்டை), இராவணசிவன் (வள்ளியூர்), செல்லத்துரை (நான்குனேரி), குமார் (தென்காசி), செவ்வகுமார் (சிவகிரி), ஆழ்வார்சாமி (சங்கரன்கோவில்), அசோக்குமார் (சேரன்மகாதேவி) மற்றும் வழக்குரைஞர்கள் கே. ஜெயபாலன், குற்றாலநாதன், பிரபாகரன், பார்வதி, லட்சுமி, கந்தசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையொட்டி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai