சுடச்சுட

  

  விளையாட்டு விடுதிகளில் சேர 4ஆம் கட்ட தேர்வு முகாம்

  By திருநெல்வேலி  |   Published on : 10th August 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான நான்காம் கட்ட தேர்வு முகாம் வரும் 12 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

  இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள், 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. அதன்படி, விளையாட்டு விடுதிக்கான நான்காம் கட்ட தேர்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

  7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்,மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேரலாம். கல்லூரி மாணவர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேரலாம். 6,7,8ஆம் வகுப்பு மாணவர்கள் முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேரலாம்.

  நான்காம் கட்ட தேர்வில் பங்கேற்கும் மாணவர், மாணவிகள் அதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு நடைபெறும் நாளான வரும் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேரில் ஆஜராக வேண்டும். தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நேரடியாகத் தேர்வு நடைபெற்று விளையாட்டு விடுதிகளில் காலியாகவுள்ள இடங்களில் சேருவதற்கான ஆணை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai