சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வெளிஆதார அடிப்படையில் ஆள் தேர்வு

  By திருநெல்வேலி  |   Published on : 11th August 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக வெளிஆதார அடிப்படையில் ஆள்களை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆட்சியர் மு.கருணாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  திருநெல்வேலி மாவட்டத்தில் 2016இல் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் மாவட்ட அளவில் ஒரு கணினி இயக்குபவர், ஊராட்சி ஒன்றிய அளவில் 19 கணினி இயக்குபவர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். வெளிஆதாரம் முறையில் மாதம் ரூ.11 ஆயிரம் வழங்கப்படும். கணினி இயக்குபவர் பணியிடத்தை பூர்த்தி செய்யத் தகுதியான ஆள்களை வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கலாம். ஊதியமானது பணியமர்த்தப்படும் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்படும். 31.12.2016 பிற்பகல் வரை மட்டுமே இந்தப் பணியிடம் அனுமதிக்கப்படும்.

  குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் கீழ்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சம்பந்தமான பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  ஊராட்சி ஒன்றியங்களில் பணியமர்த்தப்படும் கணினி இயக்கும் நபர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையருடன் முத்திரைத்தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மாதம் ஒன்றுக்கு ஒருநாள் தற்செயல் விடுப்பு வழங்கலாம். பொதுவிடுமுறைகள் தவிர இதர நாள்களில் பணிக்கு வராமல் இருந்தால் அந்த நாளுக்கான தொகுப்பூதியம் நிறுத்தப்படும்.

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதியான கணினி நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொள்ளலாம். 17.8.2016 மாலை 4 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம். வரும் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai