சுடச்சுட

    

    சங்கரன்கோவில் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தீயில் கருகி 2 பேர் சாவு

    By சங்கரன்கோவில்  |   Published on : 11th August 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கரன்கோவில் அருகே புதன்கிழமை மணல் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர்  தீயில் கருகி இறந்தனர்.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரும்பத்தூர் ராமலிங்காபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். திடீரெனஅங்கு நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது பெட்ரோல் டேங்க் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது. அதில் இருந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே உடல் கருகி பலியானார்கள்.  தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினர் வந்து தீயை அணைத்தனர். இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் உடல் கருகி  இறந்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. லாரி ஓட்டுநர் தப்பிஓடிவிட்டார். இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai