சுடச்சுட

    

    சமூகப் பாதுகாப்பு துறையில் சி, டி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    By திருநெல்வேலி  |   Published on : 11th August 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாகவுள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூகப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் கல்வி பயிலும் மற்றும் பயின்ற மாணவர், மாணவிகளைக் கொண்டு சி, டி பிரிவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே, இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான மாணவர், மாணவிகள் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், w‌w‌w.‌s‌o​c‌i​a‌l‌d‌e‌f‌e‌n​c‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றின் ஒளிநகலுடன் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், சமூகப் பாதுகாப்புத் துறை, 30. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010, தொலைபேசி: 044-26426421, 044-26427022.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai