சுடச்சுட

    

    நெல்லையில் விபத்து: போக்குவரத்துக் கழக அதிகாரி சாவு

    By திருநெல்வேலி  |   Published on : 11th August 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த போக்குவரத்துக் கழக அதிகாரி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் முருகன் (56). இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பரிசோதனை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவர், சம்பவத்தன்று வண்ணார்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பணிக்காக நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி முருகன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai