சுடச்சுட

  

  தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட கரூவூலம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   பேரூராட்சிகளில் தினக்கூலி, ஒப்பந்தக்கூலி அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றும் கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறுதி பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு அனைத்து நிலை செயல் அலுவலர்கள், உதவியாளர், தலைமை எழுத்தர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள், பணபலன் சார்ந்த பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து நிலை செயல் அலுவலர்களுக்கும் ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும்.

  பேரூராட்சிக்கு இணையான வருமானம் உள்ள 105 ஊராட்சிகளை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

   தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பெ.அ.அல்லாபிச்சை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வி.பார்த்தசாரதி தொடக்கவுரையாற்றினார். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் செ.சேகர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.குமாரவேல் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai