சுடச்சுட

    

    ரசாயன உரங்கள் விலை சரிவு: விவசாயிகளுக்கு அறிவுரை

    By திருநெல்வேலி  |   Published on : 11th August 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார்பருவ நெல் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில், கார்பருவ நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் அனைத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தனியார் உரக் கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களின் விலை மிகவும் குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. எனவே, விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விலைப் பட்டியலைப் பார்த்து உரங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இப்கோ நிறுவனத்தின் டிஏபி உரம் 50 கிலோ ரூ.1,100, காம்ப்ளக்ஸ் ரூ.825, மற்றொரு காம்ப்ளக்ஸ் ரூ.1,030 என்ற விலைக்கு கிடைக்கிறது. கிரிப்போ நிறுவனத்தின் டிஏபி ரூ.1,135, பொட்டாஷ் ரூ.550, காம்ப்ளக்ஸ் ரூ.825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபிஎல் நிறுவனத்தின் டிஏபி உரம் ரூ.1085, காம்ப்ளக்ஸ் ரூ.850, ரூ.855, ரூ.840 விலையில் கிடைக்கிறது. பொட்டாஷ் ரூ.550 விலையில் கிடைக்கிறது.

    ஆர்சிஎப் நிறுவனத்தின் டிஏபி ரூ.1,100, பொட்டாஷ் ரூ.550, பேக்ட் நிறுவனத்தின் காம்ப்ளக்ஸ் ரூ.889, ரூ.914 விலையிலும், எம்சிஎப் நிறுவனத்தின் பொட்டாஷ் ரூ.550, டிஏபி ரூ.1,100, காம்ப்ளக்ஸ் ரூ.865 விலையிலும், ஸ்பிக் நிறுவனத்தின் டிஏபி ரூ.1,150, காம்ப்ளக்ஸ் ரூ.875 என்ற விலையிலும் கிடைக்கிறது. யூரியா உரம் 50 கிலோ ரூ.284 மட்டுமே. இந்த விலையில் மாற்றமில்லை. எனவே, விவசாயிகள் குறைந்த விலையில் உரங்களைப் பெற்று பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai