சுடச்சுட

  

  13இல் 15 வட்டங்களில் பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

  By திருநெல்வேலி  |   Published on : 11th August 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.13) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

  இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இம்மாதம் 13ஆம் தேதி 15 வட்டங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

  திருநெல்வேலி வட்டத்தில் புதூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் அடைமிதித்தான்குளம், சங்கரன்கோவில் வட்டத்தில் மணலூர், தென்காசி வட்டத்தில் சில்லரைபுரவு, செங்கோட்டை வட்டத்தில் பிரானூர், சிவகரி வட்டத்தில் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் குறைதீர் முகாம் நடைபெறும்.

  வீ.கே. புதூர் வட்டத்தில் ஊத்துமலை கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் மாறாந்தை, அம்பாசமுத்திரம் வட்டத்தில் வீராசமுத்திரம், நான்குனேரி வட்டத்தில் தளவாய்புரம், ராதாபுரம் வட்டத்தில் இருக்கன்துறை பகுதி 1, கடையநல்லூர் வட்டத்தில் பெரியசாமியாபுரம், திருவேங்கடம் வட்டத்தில் சிதம்பராபுரம், மானூர் வட்டத்தில் காந்தீஸ்வரன்புதூர்,  சேரன்மகாதேவி வட்டத்தில் ராஜகுத்தாலபேரி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai