Enable Javscript for better performance
நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?- Dinamani

சுடச்சுட

    

    நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?

    By திருநெல்வேலி  |   Published on : 26th February 2016 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும். பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் கூடாது. அறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்து களங்களில் உலர வைக்க வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாகக் குறைத்து 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். பின்னர், நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும். மேலும், அடையாளத்துக்காக விதைகளின் ரகத்தை அதில் எழுதி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai