Enable Javscript for better performance
நெல்லை ரதவீதியில் கழிவுநீரோடை பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை ரதவீதியில் கழிவுநீரோடை பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை

    By திருநெல்வேலி  |   Published on : 21st May 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக இந்து முன்னணியின் வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் கா.குற்றாலநாதன், மாநகராட்சி மேயருக்கு அனுப்பியுள்ள மனு:

    திருநெல்வேலி நகரம் ரத வீதிகளில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. வடக்கு ரதவீதியின் மத்தியில் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வடக்கு ரத வீதியின் கிழக்கு முனையிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.  நெல்லையப்பர் கோயிலில் திருவிழாவையொட்டி சந்திரசேகரர் வீதியுலா, ஜூன் 19 ஆம் தேதி ஆனித் தேர்த் திருவிழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன. ஆகவே, ரதவீதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், வைகாசி விசாகம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா வைபவங்களும் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம் போல் நடைபெற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai