Enable Javscript for better performance
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு: நெல்லையில் மெளன ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் மெளன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருநெல்வேலியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை வரை மெளன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆர். சடையப்பன், பி. பெரும்படையார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வி. பழனி, கே. ஸ்ரீராம், எம். சுடலைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர். ரெங்கன், சி. லட்சுமணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ஜி. ரமேஷ், கே. கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai