Enable Javscript for better performance
தென்காசி அருகே ஓட்டுநர் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தென்காசி அருகே ஓட்டுநர் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 28th November 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே ஓட்டுநர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தென்காசி அருகே கொடிக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்த வள்ளியடிமை மகன் விஜயகுமார் (48).  இவர் லாரி ஓட்டுநர்.  இவரது மனைவி துரைச்சி. மகேந்திரன் (15), செல்வபரதன் (12) என இரு மகன்கள் உள்ளனர்.
    சனிக்கிழமை கொடிக்குறிச்சி அருகே மருதபுரம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆய்க்குடி போலீஸார் விபத்து என வழக்குப் பதிவு செய்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரை சிலர் அழைத்து சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும்,  அதுவரை உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறியும் அவரது உறவினர்கள் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்ஆய்வாளர் மீனாட்சிநாதன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து போராட்டம தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அம்பாசமுத்திரம் போலீஸ் டி.எஸ்.பி. சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai