Enable Javscript for better performance
நெல்லையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலர் மு. அப்துல் வஹாப், கிழக்கு மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் கூட்டுறவு வங்கிகள் முடங்கியதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
    மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மத்திய, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை (நவ. 28) காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai