Enable Javscript for better performance
பல்திறன் மேம்பாட்டுப் போட்டி: பெல் மெட்ரிக் பள்ளி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    பல்திறன் மேம்பாட்டுப் போட்டி: பெல் மெட்ரிக் பள்ளி சாம்பியன்

    By DIN  |   Published on : 28th November 2016 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேரன்மகாதேவியில் நடைபெற்ற பல்திறன் மேம்பாட்டுப் போட்டியில் பெல் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலை, விளையாட்டு மேம்பாட்டுப் போட்டிகள் 2 தினங்கள் நடைபெற்றன. இளம் விஞ்ஞானி, பேச்சு, ஓவியம் வரைதல், பாட்டு, நடனம், குழு நடனம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுத் தேர்வு ஆகியவற்றில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
    போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளிகளுக்கு பரிசளிப்பு விழா ஸ்காட் கல்வி குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    சேரன்மகாதேவி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராஜ், பதக்கம், கோப்பை, சான்றுகள் வழங்கிப் பாராட்டினார்.
    விழாவில், ஸ்காட் குழும பொதுமேலாளர்கள் எஸ். இக்னேஷியஸ் சேவியர், இரா. தம்பித்துரை, கல்லூரி முதல்வர் சி.கே. ரவிசங்கர், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி முதல்வர் வி. இளங்கோவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெ. மணிமாறன், மேலாளர் ரெக்ஸ், தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.பி. ரூபஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பொதுமேலாளர் க. ஜெயக்குமார் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai