Enable Javscript for better performance
பாளை.யில் கார் கதவை உடைத்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் காரின் கதவை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

    பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் டென்சிங் (35). வியாபாரி. இவர், தூய யோவான் கல்லூரி அருகேயுள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை வந்தாராம். தேவாலயத்தின் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சென்றாராம். பிரார்த்தனை முடிந்து வந்து பார்த்தபோது, காரின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.6,500 திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai