Enable Javscript for better performance
மகேந்திரகிரி "இஸ்ரோ'வில் நுழைந்த மர்ம நபர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரி "இஸ்ரோ' ராக்கெட் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த மர்மநபரை போலீஸார் கைது செய்தனர்.
    காவல்கிணறு இஸ்ரோ ராக்கெட் மையத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்தாராம். இதைப் பார்த்த மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர் கோவிந்தராஜ், அந்த நபரை பிடித்து பணகுடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
    விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள கண்ணன்விளையைச் சேர்ந்த தங்கப்பன் மகன் ஆனந்தகுமார்(32) என்பதும், காப்பர் வயர் கழிவுகளை திருட வந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.  உயரமான மதில் சுவர்கள், முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ள "இஸ்ரோ' ராக்கெட் மையத்துக்குள் மர்மநபர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai