Enable Javscript for better performance
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாநில சமூகநலத்துறை அமைச்சர் வி. சரோஜா ஆய்வு மேற்கொண்டார்.
    பள்ளியில் தங்கியிருக்கும் குழந்தைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணி செய்து வரும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினார். குழந்தைகள் கை வண்ணத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருள்களை அமைச்சர் பார்வையிட்டார்.  இந்நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், கே.ஆர்.பி. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் எஸ். ரவீந்திரநாத் சிங், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், பள்ளி முதல்வர் செ. திலகவதி, தாளாளர் பி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai