Enable Javscript for better performance
மறைந்த பாடகர் திருவுடையான் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த பாடகர் திருவுடையான் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி

    By DIN  |   Published on : 28th November 2016 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கரன்கோவிலில், மறைந்த பாடகர் ப. திருவுடையான் குடும்பத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
    இதையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற அவரது நினைவு தின விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் க. வடிவேல், தொழிலதிபர்கள் ச. ராமகிருஷ்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், சி. நடராஜன், சி. சண்முகம், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    குமரி முரசு கலைக் குழுவினரின் தப்பாட்டம் நடைபெற்றது. பாடகர்கள் கிருஷ்ணசாமி, கருணாநிதி, சுகந்தி, வசந்தி, துரையரசன், ராயப்பன் உள்ளிட்ட பாடகர்கள் இசையஞ்சலி செலுத்தினர். ப. திருவுடையான் உருவப்படத்தை, ஸ்ரீவையாபுரி கல்விக் குழுமத் தாளாளர் மருத்துவர் வி.எஸ். சுப்பராஜ் திறந்துவைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவுடையான் குடும்பத்துக்காக திரட்டிய ரூ.15 லட்சம் நிதியை, மாநில பொதுச் செயலர் சு. வெங்கடேசன், மாநிலத் தலைவர் ச. தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர்.
    திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் சு. வெங்கடேசன், மாநில துணைப் பொதுச்செயலர் கா. வேலாயுதம், மாநிலப் பொருளாளர் சு. ராமச்சந்திரன், எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
    நல்லாசிரியர் ந. பழனிச்செல்வம், அரசுப் பள்ளி வளர்ச்சிக்கு பங்காற்றும் ச. நாராயணன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியும், தாமிரபரணி கலைக் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது. ச. மோகன் குமாரமங்கலம் கவிதை வாசித்தார்.  நிகழ்ச்சிகளை அ. லட்சுமிகாந்தன் தொகுத்து வழங்கினார். கிளைச் செயலர் தி. பேச்சிமுத்து வரவேற்றார். பொருளாளர் ஆ. சிவக்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai