Enable Javscript for better performance
வங்கிக் கணக்கு தொடங்கி தருவதாக மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் மக்களுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
    பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது(50). இவர், பாளையங்கோட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாகக் கூறி அப்பகுதி மக்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களைப் பெற்றாராம். மேலும், வங்கியில் பணம் செலுத்தவும், பணத்தைத் திரும்ப பெறவும் 12 ரசீதுகளில் கையெழுத்து பெற்றாராம்.
    தகவலறிந்த பேட்டை போலீஸார், அப்துல் ஹமீதுவை சனிக்கிழமை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வங்கிக் கணக்கு தொடங்குவதாகக் கூறி மோசடி செய்ய முயன்றது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், உடந்தையாக இருந்ததாக வங்கி அதிகாரி ஒருவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai