Enable Javscript for better performance
வீரகேரளம்புதூர் அருகே பைக் மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வீரகேரளம்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ஆ.சிவசங்கரன் (37). இவர் வீரகேரளம்புதூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக சனிக்கிழமை இரவு பேருந்தில் வந்துள்ளார்.  பயண களைப்பில் சிவசங்கரன் அயர்ந்து தூங்கிவிட்டதால் பேருந்து வீரகேரளம்புதூர் பேருந்து நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இதன்பின்னர் கண் விழித்த சிவசங்கரன் அடுத்த பேருந்து நிறுத்தமான கலிங்கப்பட்டி விலக்கில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ. தொலைவுள்ள வீரகேரளம்புதூருக்கு நடந்து சென்றுள்ளார்.
    சுரண்டை - வீரகேரளம்புதூர் சாலையில் அருந்தவப்பிராட்டி குளம் அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சிவசங்கரன் மீது மோதியதாம்.  இதில் பலத்த காயமடைந்த அவரையும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வீராணத்தை சேர்ந்த சைமன் பீட்டர் என்பவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிவசங்கரன் இறந்தார். சைமன் பீட்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai