Enable Javscript for better performance
"174 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுலோச்சன முதலியார் பாலத்துக்கு நினைவு விழா'- Dinamani

சுடச்சுட

    

    "174 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுலோச்சன முதலியார் பாலத்துக்கு நினைவு விழா'

    By DIN  |   Published on : 28th November 2016 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை வெளிச் சந்தையில் விற்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
    அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தின் மதுரை மண்டல மாநாடு, திருநெல்வேலியில்  2 தினங்கள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆம் நாள் நிகழ்வினை பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலர் ஜி. ஆனந்த் தொடங்கி வைத்தார்.
    அமைப்பின் மண்டலத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநாட்டில் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலர் கே.வி.வி.எஸ்.என். ராஜு, திருநெல்வேலி கோட்ட பொதுச்செயலர் செ. முத்துக்குமாரசாமி, பொதுச்செயலர் எம். புஷ்பராஜன், இணைச் செயலர்கள் பி. சத்தியநாதன், ஜி. கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
    தீர்மானங்கள்: ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்த அசாதாரண சூழலில் இருந்து மக்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை வெளிச்சந்தையில் விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய 4 பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    பேட்டி: மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் 9 ஆயிரம் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு பங்குத் தொகையாக 1971 இல் ரூ. 19.5 கோடி மூலதனம் செய்யப்பட்டது. இத்தொகைக்கு ஆண்டுதோறும் ஈவுத்தொகை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டின் ஈவுத் தொகையாக ரூ. 1342 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    கடந்த 45 ஆண்டுகளில் மக்களின் அடிப்படை திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின்பேரில் ரூ. 1.69 லட்சம் கோடியை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு 98 சதவீதம் முதிர்வு தொகையை வழங்கியுள்ளன.
    புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai